மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

ரூ.12,000 கோடி ஐஜிஎஸ்டியை பகிர நடவடிக்கை

ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) வசூலாகியுள்ள ரூ.12,000 கோடியை பகிர்ந்து கொள்ள மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST


புது தில்லி:  ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) வசூலாகியுள்ள ரூ.12,000 கோடியை பகிர்ந்து கொள்ள மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.
இதில் ரூ.6,000 கோடியை மத்திய அரசு எடுத்துக் கொண்டு, மீதமுள்ள ரூ.6,000 கோடி அந்தந்த மாநிலங்களின் ஆகஸ்ட் மாத வரி வசூலிப்புக்கு ஏற்ப பிரித்துக் கொடுக்கப்பட இருக்கிறது. ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு இப்போது மூன்றாவது முறையாக ஐஜிஎஸ்டி பகிரப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் ரூ.50,000 கோடி ஐஜிஎஸ்டி மத்திய, மாநில அரசுகள் இடையே பகிரப்பட்டன. அதற்கு முன்பு பிப்ரவரியில் ரூ.35,000 கோடி வரி பகிரப்பட்டது.
ஐஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து குறைந்து வருகிறது. தொழில் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்தில் வரிக் கணக்கை தாக்கல் செய்து, வரியைச் செலுத்துவதால், அவர்களுக்கு வரிப் பிடித்தம் திரும்பி அளிக்கப்படுகிறது. இதனால்தான் ஐஜிஎஸ்டி வசூல் குறைகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிஎஸ்டி வரி விதிப்பின்கீழ் நுகர் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு மத்திய (சி) ஜிஎஸ்டி, மாநில (எஸ்) ஜிஎஸ்டி ஆகியவை வசூலிக்கப்பட்டு வரி வருவாய் மத்திய, மாநில அரசுகள் இடையே சமமாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இறக்குமதிப் பொருள்கள், ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டு மற்ற மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு ஐஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இது ஒட்டுமொத்தமாக மத்திய அரசால் வசூலிக்கப்பட்டு, பிறகு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.