பிரதமர் அலுவலக மக்கள் தொடர்பு துறை அதிகாரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி ஜெகதீஷ் தக்கார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


புதுதில்லி: பிரதமர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி ஜெகதீஷ் தக்கார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஜெகதீஷ்பாய் ஒரு மூத்த பத்திரிகையாளர். குஜராத் மற்றும் தில்லி என இரு இடங்களிலும் பல ஆண்டுகள் நான் அவருடன் மகிழ்ச்சியுடன் பணியாற்றி உள்ளேன். அவரது எளிமை மற்றும் நல்ல மனம் படைத்தவர் என்பதற்காக அறியப்படுபவர்.
மேலும், பல பத்திரிகையாளர்கள் ஜெகதீஷ் தக்காரிடம் பல ஆண்டுகளாக வழக்கமாக தொடர்பு கொண்டிருந்தார்கள். குஜராத்தின் பல முதல்வர்களுடன் அவர் பணியாற்றியவர். ஒரு அற்புதமான மனிதனை நாம் இழந்துவிட்டோம், அவர் வேலையை நேசித்து அதனை உற்சாகத்துடன் செய்தவர். அவரது மறைவு அதிக வருத்தத்தினை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கும் நலம்விரும்பிகளும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...