பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

நாட்டின் முதல் தானியங்கி ஆய்வு ரயில்: ரூ. 4.5 கோடியில் சென்னை ஐ.சி.எஃப். தயாரித்தது

நாட்டின் முதல் தானியங்கி ஆய்வு ரயிலை, சென்னை ஐசிஎஃப் வடிவமைத்து உருவாக்கியுள்ளது. 

சென்னை ஐசிஎஃப்-இல் வடிவமைக்கப்பட்ட தானியங்கி ஆய்வு ரயில் பெட்டி.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


நாட்டின் முதல் தானியங்கி ஆய்வு ரயிலை, சென்னை ஐசிஎஃப் வடிவமைத்து உருவாக்கியுள்ளது. 
ரயில்வே பொறியாளர்கள் தண்டவாளத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வசதியாகவும் ரயில் விபத்து ஏற்படும் சமயங்களில், உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்வதற்காகவும் இந்த ஆய்வு ரயில் பயன்படுத்தப்படும். 
இந்திய ரயில்வேயின் மண்டல மற்றும் கோட்ட அலுவலக அதிகாரிகள் ரயில் தடங்கள், ரயில் மின் அமைப்புகள், லெவல் கிராஸிங்குகள், ரயில் நிலையங்களில் பயணிகளின் பயணம் பாதுகாப்பாக அமைவதை உறுதி செய்யவும் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை ஆய்வு செய்யவும் கள ஆய்வுகள் மேற்கொள்வது வழக்கம். 
அவ்வாறு மேற்கொள்ளப்படும் கள ஆய்வுகளுக்கு ஒரு ஆய்வு ரயில் பெட்டி ஒரு டீசல் அல்லது மின்சார ரயிலுடன் இணைக்கப்பட்டு இயக்கப்படும். ஆனால், இதற்கான ரயில் என்ஜின்களை அவற்றின் பராமரிப்பு பணிமனைகளில் இருந்து எடுத்து வந்து இணைத்து, மீண்டும் அங்கே அனுப்புவதில் நேர விரயம் ஏற்படும். 
மேலும், இந்த ரயில்களை ஒவ்வொரு முனையிலும் தனியாக்கி மீண்டும் மறுமுனையில் இணைப்பது போன்ற செயல்களிலும் நேர விரயம் ஏற்படும். 
இவ்வாறான கால விரயத்தை தவிர்க்கவும், மேலும் பயணிகள் ரயில்களை இயக்க தேவையான என்ஜின்களை இவ்வாறு ஆய்வுப்பணிகளுக்கு உபயோகப்படுத்துவதை தவிர்க்கவும் இந்திய ரயில்வே ஒரு தானியங்கி ஆய்வு ரயில் பெட்டியை தயாரிக்கும் பணியை சென்னை ஐசிஎஃப் நிர்வாகத்திடம் ஒப்படைத்திருந்தது. அதன்பேரில் ஐசிஎஃப்- இல் தற்போது சுமார் ரூ. 4.5 கோடி செலவில் ஒரு தானியங்கி ரயில் பெட்டியை தயாரித்துள்ளது.
புதிய தானியங்கி ரயில் 
ஆய்வு பெட்டியின் சேவை சென்னை ஐசிஎஃப்.இல் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. 
சிறப்பு அம்சங்கள்: இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியது: ரயில் ஆய்வு பெட்டி ஸ்டெயின்லஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் அறை முழுவதும் குளிரூட்டும் வசதி செய்யப்பட்டுள்ளது. ரயிலின் இயக்க மோட்டார் மற்றும் என்ஜின் ஆகியவை பெட்டியின் கீழ்ப்புறம் பொருத்தப் பட்டுள்ளது. 40 கிலோவோல்ட் ஆற்றல் கொண்ட டீசல் என்ஜின் ரயில் பெட்டியின் கீழே பொருத்தப்பட்டு தேவையான மின்சக்தியை வழங்கும்.
இந்த ரயில் பெட்டியின் உள்புறம் அலுமினியத் தகடுகளால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெட்டியில் 32 பேர் அமர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளலாம். இதன் உள்புறமும், வெளிப்புறமும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் இயக்குநர் தடத்தை கண்காணிக்க இயலும். 
இது தவிர ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் அறிவிப்பு அமைப்பு, உடனடி தகவல் பரிமாற்றத்துக்கான வைஃபை வசதி, பசுமைக் கழிப்பறை, இருக்கைகளில் மடக்கும் வசதி கொண்ட மேசைகள், மொபைல் போன், லேப்-டாப் சார்ஜிங் வசதி, ரயிலின் உள்புறம் சப்தம் மற்றும் வெப்பம் தாக்காதிருக்க இன்சுலேஷன், எல் ஈ டி விளக்குகள், அகலமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.