ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவு

ராஜஸ்தானில் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி: முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு

ராஜஸ்தானில் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் தலைமையகத்தில் அசோக் கெலாட்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


ராஜஸ்தானில் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் முதல்வராக அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பதவியேற்றார்.
இந்நிலையில், தலைமை செயலகத்துக்கு சென்று முதல்வர் பொறுப்பை கெலாட் புதன்கிழமை ஏற்றார். பின்னர் உயரதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர், ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங்கையும் அவர் சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, ராஜஸ்தானில் ரூ.2 லட்சம் வரையிலும் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அவர் அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடன், பிற வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த கடன் தள்ளுபடியால், அரசுக்கு ரூ.18,000 கோடி செலவாகும். கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை கடன் வாங்கிய விவசாயிகள் அனைவரும் இதன் பயனை பெறுவர் என்றார்.
முன்னதாக, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலின்போது பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாள்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, மத்தியப் பிரதேச முதல்வராக பதவியேற்ற பிறகு விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான கோப்பில்தான் கமல்நாத் முதல் கையெழுத்திட்டார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேலும் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அஸ்ஸாமை ஆளும் பாஜக அரசு, விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. மேலும், குஜராத்தை ஆளும் பாஜக அரசும், கிராமப்புறங்களில் விவசாயிகள் உள்ளிட்டோரால் பாக்கி வைக்கப்பட்டிருந்த மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.