தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேக்கேதாட்டு அணை தமிழகத்திற்கே அதிக நன்மை அளிக்கக்கூடியது: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா

கர்நாடகா அரசு கட்டும் மேக்கேதாட்டு அணையால் தமிழகத்திற்கே அதிக நன்மை என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார். 

News image
Updated On :20 டிசம்பர் 2018, 5:20 am

DIN


புதுதில்லி: கர்நாடகா அரசு கட்டும் மேக்கேதாட்டு அணையால் தமிழகத்திற்கே அதிக நன்மை என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார். 

பெங்களூரு நகர தேவைக்காக மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டுவதாக கர்நாடக அரசு கூறும் காரணம் ஏற்கும்படியாக இல்லை. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து அவர்கள் தண்ணீரைப் பெறலாம். இதனால், மேக்கேதாட்டுவில் அணை கட்டும் அவசியமில்லை என்றும் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், மேக்கேதாட்டு அணை குறித்து தில்லியில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுடன் கர்நாடக எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் பிரதமர்தேவகவுடா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர் சதானந்த கவுடா செய்தியாளர்களிடம் பேசுகையில், மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. மேக்கேதாட்டு அணையால் தமிழகத்திற்கே அதிக பயன் தரும் என்றார். 

மேலும், அணை திட்டத்தை ஆதரித்துவிட்டு அதன் பிறகு முடிவு செய்ய வேண்டும் என்றவர் மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக தமிழகத்துடன் இப்போதும் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக அரசு தயாராக உள்ளது என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.