புது தில்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியின் காரணமாக எட்டாவது நாளாக பாராளுமன்றம் செயல்படாமல் முடங்கியது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துவங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் ரபேல் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.
பாராளுமன்ற வளாகத்திலும் உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளியன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில் மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையினை முன்வைத்து தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பிற கட்சி எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை பின்னர் தொடர் அமளியில் காரணமாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு, இனி வரும் 27 ஆம் தேதிதான் பாராளுமன்றம் கூட உள்ளது.
மாநிலங்களவையிலும் இதே போக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரவு 10 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



