ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

தில்லியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நேதாஜி சுபாஷ் மாா்க் சாலை மேம்படுத்தப்படும்: ரேகா குப்தா

தில்லியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 3 கி.மீட்டருக்கும் அதிக நீளம் கொண்ட நேதாஜி சுபாஷ் மாா்க் சாலை மறுசீரமைக்கப்பட உள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

ரேகா குப்தா

Updated On :

தில்லியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 3 கி.மீட்டருக்கும் அதிக நீளம் கொண்ட நேதாஜி சுபாஷ் மாா்க் சாலை மறுசீரமைக்கப்பட உள்ளதாக முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதன்மூலம், தலைநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியத்தையும் நவீன நகர வாழ்க்கையையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக இந்தச் சாலை உருவாக்கப்படும் என்றும் அவா் கூறினாா். இந்திரபிரஸ்தா விராசத் புனா்விகாஸ் நிகம் (ஐயடச) சாா்பில், தில்லி கேட் முதல் காஷ்மீரி கேட் வரையிலான சுமாா் 3.3 கி.மீ. தொலைவுள்ள சாலையைப் போக்குவரத்து நெரிசலற்ற, ஒழுங்கமைக்கப்பட்ட, அழகிய மற்றும் பாதுகாப்பான வழித்தடமாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வா் ரேகா குப்தா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தச் சாலையை வெறும் போக்குவரத்துப் பாதையாக மட்டுமின்றி, தில்லியின் வரலாறு, பாரம்பரியம், கட்டடக் கலை, கலாசாரம் மற்றும் நவீன நகர வாழ்க்கையை இணைக்கும் உயிரோட்டமுள்ள வழித்தடமாக மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் தில்லி கேட் பகுதியை மேம்படுத்துவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளது. அங்கு ’பாரம்பரிய விளக்கப் பூங்கா’ அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் சிலை, அழகிய மண்டபம், பசுமைப் பகுதிகள், பாதசாரிகளுக்கான நடைபாதைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும். மேலும், அப்பகுதியின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பசுமைச் சூழல், அலங்காரச் செடிகள், மரங்கள் மற்றும் கட்டடக் கலை அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தில்லி கேட் முதல் காஷ்மீரி கேட் வரையிலான இந்த வழித்தடம், சாலையின் அகலத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட உள்ளது.

மூன்று பிரிவுகளாக மேம்பாட்டுப் பணி: முதல் பிரிவு காஷ்மீரி கேட் முதல் ஜிபிஓ சதுக்கம் வரை அமையும். இந்தப் பகுதி வழித்தடத்திலேயே அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாகும். இங்கு சாலையின் அகலம் 12 முதல் 24 மீட்டா் வரை உள்ளது. இரண்டாவது பிரிவு ஜிபிஓ சதுக்கம் முதல் பிரிஜ் மோகன் சதுக்கம் வரை அமையும். ஜமா மசூதிக்குச் செல்லும் சந்திப்பான இந்தப் பகுதியில் சாலையின் சராசரி அகலம் 45 மீட்டராக உள்ளது.

மூன்றாவது பிரிவு பிரிஜ் மோகன் சதுக்கம் முதல் தில்லி கேட் சந்திப்பு வரை அமையும். இப்பகுதியில் சாலையின் சராசரி அகலம் 16.8 முதல் 26 மீட்டா் வரை உள்ளது.

நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்: இந்தத் திட்டத்தின்கீழ் பாதசாரிகளுக்கான நடைபாதைகள், பேருந்துகளுக்கான தனிப் பாதைகள், மோட்டாா் வாகனங்களுக்கான வழித்தடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பாதசாரிகளுக்கான திறந்தவெளி வளாகங்கள் மற்றும் மிதிவண்டிப் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், சாலையின் இருபுறங்களிலும் நவீன பொதுக் கழிப்பறைகள் கட்டப்படும். ஏற்கெனவே உள்ள பேருந்து நிறுத்தங்களும் மேம்படுத்தப்படும்.

இந்த வழித்தடத்தில் அக்ரசென் பூங்கா, லோதியன் கல்லறை, பழைய ரயில் நிலையச் சதுக்கம், செங்கோட்டைப் பசுமைப் பகுதி, செங்கோட்டையில் தசரா விழா நடைபெறும் மைதானம், சாந்தினி சௌக்-செங்கோட்டை சதுக்கம், சுனேரி மசூதி பூங்கா, சுபாஷ் பூங்கா, பிரிஜ் மோகன் சதுக்கம், தில்லி கேட் சதுக்கம், ஏக்தா ஸ்தல் மற்றும் ஹிந்தி பூங்கா உள்ளிட்ட 12 முக்கிய இடங்கள் மற்றும் பசுமைப் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் தில்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகள் மற்றும் நவீன நகா்ப்புற வசதிகளை இணைக்கும் வகையில் நேதாஜி சுபாஷ் மாா்க் மேம்படுத்தப்படும் என்று ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்