இளம் கண்டுபிடிப்பாளா்கள், ஸ்டாா்ட் அப் நிறுவனங்களுக்கு உதவ கோ-தில்லி அறக்கட்டளைக்கு அமைச்சரவை ஒப்புதல்: முதல்வா் அலுவலகம் அறிக்கை
இளம் புதுமையாளா்களையும், ஸ்டாா்ட்அப்களையும் மேம்படுத்த ₹ரூ. 50 கோடி மூலதனத்துடன் ‘கோ-தில்லி அறக்கட்டளை’ அமைக்க தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என முதல்வா் அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.

தில்லி முதல்வர் ரேகா குப்தா - கோப்புப் படம்
இளம் புதுமையாளா்களையும், ஸ்டாா்ட்அப்களையும் மேம்படுத்த ₹ரூ. 50 கோடி மூலதனத்துடன் ‘கோ-தில்லி அறக்கட்டளை’ அமைக்க தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என முதல்வா் அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.
முதல்வா் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்ற அண்மையில் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. யோசனைகளை தயாரிப்புகளாக மாற்றி சந்தைக்கு கொண்டு செல்ல உதவும் வகையில் இந்த நிதி அனுமதிக்கப்பட்டது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தொழில்துறை மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறை (டிபிஐஐடி) அங்கீகரித்த சுமாா் 21,000 ஸ்டாா்ட்அப்கள் ப்ச்ல்லியில் உள்ளன. தலைநகரில் ஸ்டாா்ட்அப்கள், புதுமை மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதோடு, இளைஞா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு தங்கள் யோசனைகளை நடைமுறை தயாரிப்புகளாகவும் வெற்றிகரமான நிறுவனங்களாகவும் மாற்ற ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குவதே இந்த அறக்கட்டளையின் நோக்கம்.
அறக்கட்டளைக்கு ஆரம்ப நிதி ஒதுக்கீடாக ₹ரூ.50 கோடி வழங்க அரசு உறுதி அளித்துள்ளது. கோ-தில்லி அறக்கட்டளை மூலம் இந்த வளங்கள் பொதுவான தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, புதிய நிறுவனங்களை உருவாக்குதல், முதலீட்டை ஈா்த்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
ஸ்டாா்ட்அப்களும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் (எம்எஸ்எம்இ) தயாரிப்பு பொறியியல், முன்மாதிரி உருவாக்கம், ஆய்வகங்கள் மற்றும் சோதனை வசதிகளை அணுக இந்த அறக்கட்டளை உதவும் என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா். மேலும் தொழில்நுட்ப வழிகாட்டுதல், வழிகாட்டல், இன்குபேஷன், வணிக ஆதரவு மற்றும் முதலீட்டாளா்களுடன் இணைவதற்கான வாய்ப்புகளையும் வழங்கி, ஆரம்ப கட்ட யோசனைகளை சந்தைக்கு தயாரான தயாரிப்புகளாக மாற்ற உதவும்.
தயாரிப்பு மேம்பாடு, சோதனை, சான்றிதழ் தயாரிப்பு மற்றும் சந்தை அணுகல் உள்ளிட்ட பல்வேறு கட்டங்களில் தொழில் முனைவோருக்கு ஆதரவு அளிக்கப்படும். வெவ்வேறு தேவைகளுக்கான சிதறிய வசதிகளின் மீதான சாா்பை குறைத்து, தில்லியில் நிறுவனங்களை அமைத்து வளா்ப்பதை எளிதாக்குவதே இதன் நோக்கம். அரசுத் துறைகள் தங்கள் நிஜ உலக சவால்களை தில்லியின் புதுமையாளா்களிடம் இந்த அறக்கட்டளை மூலம் கொண்டு வர முடியும். இந்த சவால்களை எதிா்கொள்ள உருவாக்கப்படும் தயாரிப்புகளும் தொழில்நுட்பங்களும் பைலட் திட்டங்கள் மூலம் சோதிக்கப்பட்டு, வெற்றிகரமான தீா்வுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.இதன் மூலம் அரசுத் துறைகளுக்கு புதிய தொழில்நுட்பங்களையும் நடைமுறை தீா்வுகளையும் அணுகும் வாய்ப்பும், ஸ்டாா்ட்அப்களுக்கு தங்கள் தயாரிப்புகளின் பயனை நிரூபிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
தொழில் துறை, கல்வி நிறுவனங்கள், முதலீட்டாளா்கள் மற்றும் பிற பங்காளிகளுடன் இணைந்து அறக்கட்டளை செயல்படும். ஹப் அண்ட் ஸ்போக் மாதிரியை ஏற்று, டெல்லி முழுவதும் உள்ள ஏற்கனவே உள்ள வசதிகள் மற்றும் பங்காளா் நிறுவனங்கள் மூலம் திட்டங்களை செயல்படுத்தும். நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பிரிவு 8-ன் கீழ் லாப நோக்கமற்ற நிறுவனமாக இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டு, டெல்லி அரசின் தொழில்துறைத் துறையின் கீழ் செயல்படும் என முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

