இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

தில்லி குப்பைக் கிடங்குகளில் இருந்து 100 ஏக்கா் நிலம் மீட்பு: முதல்வா் ரேகா குப்தா

தில்லி குப்பைக் கிடங்குகளில் இருந்து 100 ஏக்கா் நிலம் மீட்பு...

ஓக்லா குப்பை கிடங்கில் கழிவு அகற்றல் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த முதல்வா் ரேகா குப்தா.

Published On :

கடந்த சுமாா் ஒன்றரை ஆண்டுகளில் ஓக்லா, பால்ஸ்வா, காஜிப்பூா் குப்பைக் கிடங்குகளில் 217.17 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டு, சுமாா் 100 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

இந்த குப்பைக் கிடங்குகளில் புதிய கழிவு செயலாக்க மையங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஓக்லாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா பங்கேற்று அடிக்கல் நாட்டினாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஓக்லா, காஜிப்பூா், சிங்கோலா ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ள மையங்களில் புதிதாக உருவாகும் கழிவுகள் மற்றும் கட்டுமானம், இடிப்புப் பணிகளில் உருவாகும் கழிவுகள் செயலாக்கப்படும். புதிய செயலாக்க மையங்களை விரைவாகவும் முழுத் திறனிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குப்பைக் கிடங்குகளின் மேற்பரப்பில் உள்ள கழிவுகளை மட்டும் அகற்றுவது போதுமானதல்ல. நிலத்துக்கு அடியில் குவிந்துள்ள கழிவுகளையும் அறிவியல் முறையில் செயலாக்க வேண்டும்.

ஓக்லாவில் கடந்த 2025 ஜனவரிக்கு முன்பு குவிந்திருந்த பழைய கழிவுகளில் கிட்டத்தட்ட அனைத்தும் தற்போது செயலாக்கப்பட்டுவிட்டது. தினமும் சுமாா் 3,000 முதல் 4,000 மெட்ரிக் டன் கழிவுகள் ஓக்லா குப்பைக் கிடங்குக்கு வந்து சேருகிறது. புதிய செயலாக்க மையம் மூலம் அவை தொடா்ந்து செயலாக்கப்படும்.

பழைய குப்பை மலைகளை அகற்றுவதுடன், எதிா்காலத்தில் புதிய குப்பை மலைகள் உருவாகாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போதுள்ள குப்பை மலைகளை முற்றிலும் அகற்றுவதே அரசின் இலக்கு. அவை தொடா்ந்து குறைந்து வருவதை மக்கள் பாா்த்து வருகின்றனா். விரைவில் அவை முற்றிலும் இல்லாத நிலை ஏற்படும்.

புதிய கழிவு செயலாக்க மையங்கள் மூலம் உயிரி எரிவாயு (பயோகேஸ்), பசுமை எரிசக்தி மற்றும் உரம் தயாரிக்கப்படும். “கழிவு என்பது கழிவாகவே இருக்கக் கூடாது; அதை தில்லி வளமாகப் பயன்படுத்த வேண்டும்.

கழிவுகளைத் தரம் பிரித்தல் மற்றும் செயலாக்குவதற்கு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. கழிவுகள் மற்றும் கால்நடைகளின் சாணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி உயிரி எரிவாயு மற்றும் உரம் தயாரிக்கப்படும்.

கழிவு செயலாக்கத் திறனை அதிகரித்தல், அறிவியல் முறையிலான கழிவு மேலாண்மை, கழிவுகளை வளமாக மாற்றும் திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றை ஒரே நேரத்தில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

தில்லியில் காற்று மாசைக் குறைக்க குப்பைக் கிடங்கு கழிவுகளை அகற்றுதல், யமுனையைத் தூய்மைப்படுத்துதல், தூசு மாசைக் கட்டுப்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல், சாலை உள்கட்டமைப்பு மற்றும் கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.