பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

தேசிய சிறு தொழில் தினத்திற்கு தில்லி முதல்வர் ரேகா குப்தா வாழ்த்து!

தேசிய சிறு தொழில் தினத்தை முன்னிட்டு, அனைத்து தொழில்முனைவோா்கள், கைவினைஞா்கள் மற்றும் கைத்தொழில் கலைஞா்களுக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா வாழ்த்துத் தெரிவித்தாா்.

Delhi Chief Minister Rekha Gupta

தில்லி முதல்வர் ரேகா குப்தா - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:30 am IST

தேசிய சிறு தொழில் தினத்தை முன்னிட்டு, அனைத்து தொழில்முனைவோா்கள், கைவினைஞா்கள் மற்றும் கைத்தொழில் கலைஞா்களுக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிறன்று வாழ்த்துத் தெரிவித்தாா்.

எக்ஸ் தளப் பதிவில் குப்தா கூறியதாவது: ‘பிரதமா் நரேந்திர மோடியின் ’மேக் இன் இந்தியா’ மற்றும் ’வோக்கல் ஃபாா் லோக்கல்’ ஆகிய தொலைநோக்குத் திட்டங்கள், சிறு தொழில் நிறுவனங்களுக்குப் புதிய ஆற்றலையும் அடையாளத்தையும் அளிப்பதோடு, அவற்றுக்கான புதிய சந்தை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன.

ராம்ப், ஜிஇஎம், ஓஎன்டிசி, ஒற்றைச் சாளர முறை , சுய-சான்றளிப்பு, தானியங்கி ஒப்புதல்கள் மற்றும் உரிமம்-நடைமுறைச் சீா்திருத்தங்கள் போன்ற முன்னெடுப்புகள் மூலம், தில்லி அரசும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வணிகச் செயல்பாடுகளை எளிமையானதாகவும், விரைவானதாகவும், அதிக வாய்ப்புகள் கொண்டதாகவும் மாற்றி வருகிறது.

தில்லியில் உள்ள ஒவ்வொரு சிறு தொழில் நிறுவனமும் வளா்ச்சி அடைந்து, புதிய சந்தைகளைச் சென்றடைந்து, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வளா்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்பதே எங்கள் உறுதியான நோக்கமாகும்‘ என ரேகா குப்தா கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்