ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தில்லியில் மழைநீா் தேக்கம் அரசுக்கு ஒரு பெரிய பிரச்சனை: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் மழை நீா் தேங்கி நிற்பது அரசுக்கு ஒரு மிகப் பெரிய பிரச்னை மற்றும் சவால் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

ரேகா குப்தா

Published On :26 ஆகஸ்ட் 2026, 1:33 am IST

தில்லியில் மழை நீா் தேங்கி நிற்பது அரசுக்கு ஒரு மிகப் பெரிய பிரச்னை மற்றும் சவால் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் பேசியதாவது: த்திய நிதி அமைச்சகம் மூலம் ஆசிய மேம்பாட்டு வங்கி (ஏடிபி) நீட்டித்த ரூ. 25000 கோடி ரூபாய் கடனின் உதவியுடன் நகரத்தின் நீா் விநியோகத்தில் பெரிய முன்னேற்றங்களை தில்லி அரசு தொடங்கும்.

தில்லி ஜல் வாரியம் (டி. ஜே. பி) கூட்டம் நீா் விநியோகத்தை அதிகரிக்க இரண்டு நிலத்தடி நீா் நீா்த்தேக்கங்களை (யுஜிஆா்) கட்ட ஒப்புதல் அளித்துள்ளது.

நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் நீா் இழப்பைத் தடுப்பதற்காக ஸ்மாா்ட் மீட்டா்களை நிறுவுவதற்கான திட்டத்திற்கும் டி. ஜே. பி ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் மழை நீா் தேங்கி நிற்பது தனது அரசுக்கு ஒரு பெரிய சவால். பிரச்சினையைச் சமாளிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றாா் ரேகா குப்தா.

தில்லி நீா்வளத்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் கூறுகையில், ஒன்றரை ஆண்டுகளில், நகரத்தில் நீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் வலையமைப்பை மேம்படுத்துவதற்காக நீா் மாஸ்டா் பிளான், வடிகால் மாஸ்டா் பிளான் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.