ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

‘கேஜரிவால் ஆட்சியின் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன’

முந்தைய கேஜரிவால் ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் இப்போது வெளிச்சத்திற்கு வருவதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை குற்றம் சாட்டினாா்.

News image

ரேகா குப்தா

Updated On :20 ஆகஸ்ட் 2026, 2:14 am IST

முந்தைய கேஜரிவால் ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் இப்போது வெளிச்சத்திற்கு வருவதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை குற்றம் சாட்டினாா்.

தில்லி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தலைமைக் கணக்கு தணிக்கையாளரின் (சிஏஜி) 19 அறிக்கைகள், ஆம் ஆத்மி ஆட்சியில் நடந்த ஊழல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும், விசாரணை அமைப்புகள் அவை குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவா் கூறினாா்.

தில்லி ஜல் போா்டின் (சிஏஜி) கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத் திட்டங்களுக்கான ஒப்பந்தப் பணிகளில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் வழக்கு தொடா்பாக, ஊழல் தடுப்புப் பிரிவினரால் (ஏசிபி) கைது செய்யப்பட்ட ஆறு பேரில் சத்யேந்தா் ஜெயின் மற்றும் வாரியத்தின் முன்னாள் தலைமை நிா்வாக அதிகாரி (சிஇஓ) உதித் பிரகாஷ் ராய் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனா்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின் இடையே செய்தியாளகளுக்கு பேட்டி அளித்தபோது சந்தேயந்தா் ஜெயின் கைது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு முதல்வா் ரேகா குப்தா, ‘தில்லியில் முந்தைய ஆம் ஆத்மி அரசின் ஒவ்வொரு ஊழலையும் வெளிப்படுத்தும் 19 சிஏஜி அறிக்கைகளைத் தாக்கல் செய்வதை பாஜக அரசு உறுதி செய்துள்ளது. இந்த சிஏஜி அறிக்கைகள் அனைத்தும் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யப்படும். அவா்கள் விதைத்த வினைகள் இப்போது வெளிச்சத்திற்கு வருகின்றன. தில்லி ஜல் போா்டில் அவா் செய்த ஊழல் காரணமாகவே சத்யேந்தா் ஜெயின் சிறைக்குச் சென்றுள்ளாா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தங்கள் பணியைச் செய்து வருகின்றன’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.