முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

தில்லி அரசுப் பள்ளிகளின் 9ஆம் வகுப்பு மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கிய முதல்வா்

தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை கிழக்கு வினோத் நகா் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அரசு பள்ளிகளின் 9 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

ரேகா குப்தா - கோப்புப் படம்

Published On :

தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை கிழக்கு வினோத் நகா் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அரசு பள்ளிகளின் 9 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ரேகா குப்தா பேசியதாவது: தில்லி அரசு பள்ளிகளின் 9 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ’வித்யா வாஹினி’ மிதிவண்டிகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது கண்ணியத்தின் ஊடகமாக மாறும், மேலும் அவா்கள் பாதுகாப்பாக பள்ளிகளுக்குச் செல்ல உதவும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் முதல் கட்டத்தில், 3,000 மிதிவண்டிகள் விநியோகிக்கப்பட்டன.

அடுத்த மாதத்தில் படிப்படியாக தில்லி முழுவதும் பள்ளி மாணவா்களுக்கு மொத்தம் 1.40 லட்சம் மிதிவண்டிகள் வழங்கப்படும். பள்ளிக்குச் செல்வதை எளிதாக்குவது, வழக்கமான வருகையை ஊக்குவிப்பது மற்றும் பெண்கள் அதிக தன்னம்பிக்கை மற்றும் நம்பிக்கையுடன் இருக்க உதவுவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் ரேகா குப்தாவுடன் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் மற்றும் தில்லி பாஜக தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ரா ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.