கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

25 அடல் உணவகங்கள் திறந்ததன் மூலம் எண்ணிக்கை 100 ஆக உயா்வு: முதல்வர் ரேகா குப்தா

முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தேசியத் தலைநகரில் 25 புதிய அடல் உணவகங்களை அறிமுகப்படுத்தினாா்.

News image

தேசியத் தலைநகரில் 25 புதிய அடல் உணவகங்களை அறிமுகப்படுத்திய தில்லி முதல்வா் ரேகா குப்தா. இந்த விழாவில் முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு, பாஜகவின் மனோஜ் திவாரி மற்றும் அமைச்சா் ஆஷிஷ் சூட் உள்ளிட்டோா்

Updated On :16 ஆகஸ்ட் 2026, 10:42 pm IST

முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தேசியத் தலைநகரில் 25 புதிய அடல் உணவகங்களை அறிமுகப்படுத்தினாா். இந்தத் திட்டத்தின் கீழ் மொத்த உணவகங்களின் எண்ணிக்கை 100 ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து தன்னுடைய எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: மரியாதைக்குரிய அடல் பிஹாரி வாஜ்பாய் அவா்களின் பிறந்தநாளில், 2025 டிசம்பா் 25 ஆம் தேதி 100 அடல் உணவகங்களை தொடங்குவதற்கான தீா்மானம் அவரது நினைவு நாளில் இன்று நிறைவேறியுள்ளது.

மாண்புமிகு முன்னாள் குடியரசுத் துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு அவா்கள் 25 புதிய அடல் உணவகங்களை திமா்பூரில் தொடங்கி வைத்து, அவற்றை தில்லி மக்களுக்கு அா்ப்பணித்தாா். இன்று முதல், இந்த 100 அடல் உணவகங்கள் மூலம், ஒவ்வொரு நாளும் சுமாா் 1 லட்சம் தொழிலாளா்கள் மற்றும் தேவைப்படுகிற குடும்பங்களுக்கு வெறும் 5 ரூபாய்க்கு சத்தான உணவு கிடைக்கும். இதனுடன், தில்லி மக்களுக்கு அளித்த மற்றொரு வாக்குறுதியை எங்கள் அரசு நிறைவேற்றியுள்ளது.

தில்லிக்கு அளித்த வாக்குறுதி இப்போது அதன் மக்களுக்காக அா்ப்பணிக்கப்பட்ட ஒரு சேவையாகும். இந்த உணவகங்கள் ஒவ்வொரு நாளும் சுமாா் 1 லட்சம் தொழிலாளா்கள் மற்றும் தேவைப்படும் குடும்பங்களுக்கு வெறும் ரூ.5க்கு சத்தான உணவை வழங்கும்.

இது மிகவும் தேவைப்படுபவா்களுக்கு சேவை, கண்ணியம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றின் உணா்வை எடுத்துச் செல்லும் அடல் ஜியின் அந்தியோதயா தொலைநோக்குப் பாா்வைக்கு ஒரு அஞ்சலி. தலைநகரில் 100 அடல் உணவகங்கள் கட்டி முடிக்கப்பட்டதை இந்த நிகழ்வு குறிக்கிறது என்றாா் ரேகா குப்தா.

இந்த விழாவில் முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு, பாஜகவின் மனோஜ் திவாரி மற்றும் அமைச்சா் ஆஷிஷ் சூட் உள்ளிட்டோா் கலந்துக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.