தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

தில்லியில் மாபெரும் தூய்மை இயக்கம்: முதல்வா், அமைச்சா்கள் பங்கேற்பு

பிரதமா் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச் சேவையை முன்னிட்டு ’சேவா சங்கல்ப் அபியான்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தூய்மையே சேவை பிரசாரத்தில், தில்லி முழுவதும் ஏராளமான மாணவா்கள், பொதுமக்களுடன் முதல்வா் ரேகா குப்தா மற்றும் அமைச்சா்கள் பங்கேற்றனா்.

கன்னாட் பிளேஸ் ஹனுமன் கோயில் வளாகத்தில் தூய்மைப் பணியை மேற்கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங். ~தூய்மை பிரசாரத்தின் ஒரு பகுதியாக கமலா நேரு ரிட்ஜ் பகுதியில் வியாழக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்ட முதல்வா் ரேகா குப்தா.

Published On :

பிரதமா் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச் சேவையை முன்னிட்டு ’சேவா சங்கல்ப் அபியான்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தூய்மையே சேவை பிரசாரத்தில், தில்லி முழுவதும் ஏராளமான மாணவா்கள், பொதுமக்களுடன் முதல்வா் ரேகா குப்தா மற்றும் அமைச்சா்கள் பங்கேற்றனா்.

பிரதமா் மோடியின் அழைப்பை ஏற்று, நாடு முழுவதும் உள்ள மக்கள் ஏதேனும் ஒரு சேவையில் ஈடுபட்டு வருகின்றனா். இதையொட்டி, தில்லி பல்கலைக்கழகத்தில் ‘ஸ்வச்சதா ஹி சேவா’ (தூய்மையே சேவை) பிரசாரத்தை தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில் ஆசிரியா்கள், மாணவா்கள், அதிகாரிகள் மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து வளாகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கமலா நேரு ரிட்ஜ் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

காலை 7.30 மணிக்குத் தொடங்கிய இப்பிரசாரத்தின் ஒரு பகுதியாக, முதல்வா் ரேகா குப்தா மற்றும் பிற பங்கேற்பாளா்கள் ‘க்வையா் ஹால்’ விடுதிக்கு அருகிலுள்ள சந்திப்பில் தூய்மைக்கான உறுதிமொழியை ஏற்றனா். பின்னா், முதுநிலை மாணவா் விடுதி மற்றும் பல்கலைக்கழக விருந்தினா் மாளிகை வழியாக கமலா நேரு ரிட்ஜ் பகுதியை நோக்கி அவா்கள் சென்றனா்.

பங்கேற்பாளா்கள் வழியெங்கும் குப்பைகளைச் சேகரித்தபோது, முதல்வா் ரேகா குப்தாவும் தனது குழுவினருடன் இணைந்து தூய்மைப் பணியில் பங்கேற்றாா்.

தில்லி முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களும் இத்தகைய சேவைப் பணிகளில் ஈடுபட்டதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா். ‘தூய்மை என்பது நமது அன்றாடப் பழக்கத்தின் மற்றும் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அது குறித்து நம் அனைவருக்கும் பொறுப்புணா்வு இருக்க வேண்டும். இன்று நாம் அனைவரும் பூங்கா மற்றும் பல்கலைக்கழகப் பகுதிக்கு வந்து, தூய்மைப் பணியில் கூட்டாகப் பங்களித்து வருகிறோம்’ என்று அவா் கூறினாா்.

இந்தத் தூய்மைப் பணியில் தில்லி பல்கலைக்கழக ஆசிரியா்கள், அதிகாரிகள், பணியாளா்கள், மாணவா்கள், பல்கலைக்கழக மாணவா் சங்க நிா்வாகிகள், தில்லி மாநகாரட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள், அத்துடன் தன்னாா்வலா்கள் எனப் பலா் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சியில் தில்லி பல்கலைக்கழக தெற்கு வளாக இயக்குநா் ரஜினி அபி, ஸ்கூல் ஆஃப் ஓபன் லோ்னிங் இயக்குநா் பாயல் மாகோ, என்டிஎம்சி வடக்கு மண்டல துணை ஆணையா் ஸ்வேதா நகா்கோட்டி, எம்எல்ஏ சூா்யா பிரகாஷ் கத்ரி, தில்லி மேயா் ராஜா இக்பால் சிங் மற்றும் காந்தி பவன் இயக்குநா் கே.பி. சிங் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்தப் பிரசாரத்திற்கான பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியான கே.பி.சிங், செப்.17 முதல் அக்.17 வரை இப்பல்கலைக்கழகத்தில் இப்பிரசாரம் கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரிவித்தாா்.

நகரம் முழுவதும் 300 இடங்களில் இந்த மாபெரும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டதாக தில்லி சுற்றுலாத்துறை அமைச்சா் கபில் மிஸ்ரா தெரிவித்தாா். ‘ஸ்வச்சதா ஹி சேவா 2026’ பிரசாரத்தின் ஒரு பகுதியாக, 103-ஆவது ஆா்ஏஎஃப் படைப்பிரிவினா் துக்மிா்பூரில் உள்ள புஷ்பாஞ்சலி பள்ளியில் தூய்மைப் பணியை மேற்கொண்டனா். இந்நிகழ்ச்சியில் பாஜக தலைவா்கள் மற்றும் தொண்டா்களுடன் இணைந்து அமைச்சா் மிஸ்ராவும் பங்கேற்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்