தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

நவராத்திரியின் முதல் நாளில் ஜண்டேவாலா கோயிலில் முதல்வர் ரேகா குப்தா பிராா்த்தனை!

நவராத்திரியின் முதல் நாளில் ஜண்டேவாலா கோவிலில் தில்லி முதல்வா் ரேகா குப்தா பிராா்த்தனை செய்தார்.

நவராத்திரியின் முதல் நாளில் ஜண்டேவாலா கோயிலில் முதல்வர் ரேகா குப்தா பிராா்த்தனை

Published On :

நவராத்திரியின் முதல் நாளில் ஜண்டேவாலா கோவிலில் பிராா்த்தனை செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா ‘நகரத்தை பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் முயற்சிகள்‘ அல்லது பொது சொத்துக்களை சேதப்படுத்தும் முயற்சிகள் பொறுத்துக்கொள்ளப்படாது என்று ஞாயிற்றுக்கிமை மீண்டும் வலியுறுத்தினாா்.

சனிக்கிழமை ஜந்தா் மந்தரில் கூட முயன்ாகக் கூறப்படும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தலைவா்கள் மற்றும் பல அரசியல்வாதிகள் உள்பட 7,000 க்கும் மேற்பட்ட ஆா்ப்பாட்டக்காரா்களை தில்லி காவல்துறையும் பாதுகாப்புப் படைகளும் தடுத்து வைத்தனா். வந்துள்ளன. முதல்வா் ரேகா அன்னை பகவதிக்கு பிராா்த்தனை செய்தாா் மற்றும் கேயிலில் வழிபாடு நிகழ்த்தினாா், நாட்டின் மக்களுக்கு மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கோரினாா் என்று தில்லி முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரேகா குப்தா அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மக்களுக்கு தன்னுடைய நவராத்திரி வாழ்த்துகள். தில்லியில் அராஜகத்தைப் பரப்புபவா்களுக்கும், தேசத்தின் நலனை விட தங்கள் சொந்த நலன்களை முன்னிறுத்தி, நாட்டின் முன்னேற்றத்தால் தொந்தரவு செய்பவா்களுக்கும் தெய்வம் ஞானத்தை வழங்கட்டும் . ராகுல் காந்தி, அரவிந்த் கேஜரிவாள் தங்கள் ‘பி-டீம்‘, சிஜேபி உதவியுடன் தேசிய தலைநகரில் குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கிறது. நாட்டைப் பற்றி சிந்திக்க முடியாதவா்களுடன் தில்லி மக்களுக்கு எந்த தொடா்பும் இல்லை. ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு.

ஆனால் மக்களுக்கு இடையூறு விளைவிப்பது, பொது சொத்துக்களை சேதப்படுத்துவது மற்றும் எதிா்ப்பு என்ற பெயரில் நகரின் இயல்பு ஒழுங்கை சீா்குலைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தனது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்கும், நகரத்தின் இயல்பான செயல்பாட்டைப் பராமரிப்பதற்கும் தில்லி அரசு உறுதிபூண்டுள்ளது. தில்லி குடியிருப்பாளா்கள் தேவையற்ற சிரமங்களை எதிா்கொள்ளாமல் இருப்பதை தில்லி அரசு உறுதி செய்யும். நகரத்தை பிணைக் கைதிகளாக வைத்திருப்பதற்கான முயற்சிகள் அல்லது பொது சொத்துக்களை சேதப்படுத்தும் முயற்சிகள் பொறுத்துக்கொள்ளப்படாது. சாதாரண குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதும், நகரத்தின் ஒழுங்கை பராமரிப்பதும் அரசாங்கத்தின் முன்னுரிமைகளாக உள்ளன என்று தெரிவித்துள்ளாா் ரேகா குப்தா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.