மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

அமெரிக்கர்களை மிரட்டி மோசடி செய்த போலி கால்சென்டர் கண்டுபிடிப்பு: 126 ஊழியர்கள் கைது 

அமெரிக்க குடிமக்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மோசடியில் ஈடுபட்டதாக வந்த புகாரின்பேரில், நொய்டாவில் செயல்பட்டு வந்த போலி கால் சென்டரில் விசாரணை நடத்திய போலீஸார் அங்கு பணியாற்றிய 126 பேரை கைது செய்தனர்.

News image
Updated On :22 டிசம்பர் 2018, 6:12 am

அமெரிக்க குடிமக்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மோசடியில் ஈடுபட்டதாக வந்த புகாரின்பேரில், நொய்டாவில் செயல்பட்டு வந்த போலி கால் சென்டரில் விசாரணை நடத்திய போலீஸார் அங்கு பணியாற்றிய 126 பேரை கைது செய்தனர்.

இது குறித்து நொய்டா முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அஜய் பால் சர்மா வெள்ளிக்கிழமை கூறியதாவது:

நொய்டாவில் உள்ள செக்டார் 63-இல் செயல்பட்டு வந்த கால் சென்டரில் இருந்து மோசடியான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கால் சென்டரில் வியாழக்கிழமை இரவு சோதனை நடத்தப்பட்டது. 

அங்கு பணியில் இருந்த ஆப்பரேட்டர்கள், அழைப்பாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அமெரிக்க அரசால் வழங்கப்பட்டுள்ள 9 இலக்கம் கொண்ட சமூக பாதுகாப்பு எண்களில் பிரச்னை இருப்பதாக மிரட்டி, அதைச் சரி செய்ய பணம் கேட்டுள்ளது தெரியவந்தது. 

இதையடுத்து, அங்கு பணியாற்றிய 126 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த சில மாதங்களாக நொய்டாவில் 12 போலி கால் சென்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அமெரிக்கர்கள், கனடா நாட்டினர் உள்பட வெளிநாட்டினரை மோசடி செய்ததாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.