முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மூதறிஞர் ராஜாஜி நினைவு தினம்: தமிழ்ச் சங்கத்தினர் மரியாதை

மூதறிஞர் ராஜாஜி என அழைப்படும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின் நினைவு தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது சிலைக்கு தில்லி தமிழ்ச்

News image
Updated On :26 டிசம்பர் 2018, 2:35 am IST


மூதறிஞர் ராஜாஜி என அழைப்படும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின் நினைவு தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது சிலைக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மலர் மரியாதை செலுத்தினர்.
ராஜாஜி, கடந்த 1878, டிசம்பர் 10-ஆம் தேதி தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் உள்ள தொரப்பள்ளியில் பிறந்தார். தமது 93-ஆவது வயதில் 1972, டிசம்பர் 25-இல் அவர் காலமானார். சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல்வாதி, சமூக ஆர்வலர், வரலாற்றாளர், வழக்குஞைரர் என பன்முகத் தன்மை கொண்டவர். சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக அவர் பதவி வகித்துள்ளார்.
அவரது நினைவு தினத்தையொட்டி, தில்லியில் ராஜாஜி மார்கில் அமைந்துள்ள ராஜாஜி சிலைக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை மலர் மரியாதை செலுத்தப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இந்துபாலா, துணைத் தலைவர் கி. பென்னேஸ்வரன், பொதுச் செயலர் இரா. முகுந்தன், பொருளாளர் எம். சத்தியமூர்த்தி, இணைப் பொருளாளர் கே.கணேசன், செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், எம்.சம்பத்குமார், எஸ்.மகேந்திரன், சங்கத்தின் முன்னாள் இணைச் செயலர் பெ.ராகவன் நாயுடு, கர்நாடக சங்கீத சபா செயலர் ஆர்.மகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.