ராஜன்னா சிர்கில்லா (தெலங்கானா): தனக்கு சூனியம் வைக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் தாயின் கழுத்தை மகன் நெரித்துக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து ராஜன்னா சிர்கில்லா மாவட்டம் பொய்ன் பல்லே போலீஸ் நிலைய தரப்பில் கூறப்படுவதாவது:
கடந்த 23-ஆம் தேதி ஸ்ரீனிவாஸ் என்னும் நபர் தனது தாயாரை வீட்டிலேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். தனது தயார் பில்லி சூனிய பயிற்சிகள் மேற்கொள்வதாகவும், தனக்கே அவர் சூனியம் வைப்பதாகவும் ஸ்ரீனிவாஸ் சந்தேகம் அடைந்துள்ளார். அதன் காரணமாகவே தனக்கு அடிக்கடி உடல்நலம் இல்லாமல் போவதாகவும் அவர் எண்ணியுள்ளார்.
எனவே இதற்கு காரணமான தனது தாயாரைக் கொன்று விடுவது என்று திட்டமிட்ட அவர் 23-ஆம் தேதியன்று வீட்டிலிருந்த போது, 52 வயதான தாயாரை கொடூரமாக கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
இ.பி.கோ 302-ஆவது பிரிவின் கீழ் ஸ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



