அயோத்தியில் நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி சில தீர்வுகளை தெரிவித்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் எவருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கெளல் தலைமையிலான அமர்வு முன்பு ஜனவரி 4-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, செவ்வாய்கிழமை கூறியதாவது:
கடந்த 1994-ஆம் ஆண்டு அப்போதைய நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் நானும் மத்திய அமைச்சராக செயல்பட்டுள்ளேன். அச்சமயம் இவ்விவகாரம் தொடர்பாக ஏதேனும் தீர்வு உள்ளதா என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. எனவே சில தீர்வுகளை முன்வைத்து அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் அறிக்கை வெளியிட்டார். அதில், குறிப்பிட்ட இடத்தில் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் இருந்தால், ஹிந்துமத நம்பிக்கைப்படி அங்கு செயல்படுத்தப்படலாம் என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசுப் பேருந்துகள் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

ஜனவரி - மாா்ச் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் ரூ. 1.06 லட்சம் கோடி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



