விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

கொல்கத்தாவில் பயங்கர சம்பவம்: தாயின் சடலத்தோடு 18 நாட்கள் தங்கியிருந்த மகன்

கொல்கத்தாவில் தாயின் சடலத்தோடு 18 நாட்கள் தங்கியிருந்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :25 டிசம்பர் 2018, 4:40 pm IST


கொல்கத்தா: கொல்கத்தாவில் தாயின் சடலத்தோடு 18 நாட்கள் தங்கியிருந்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 38 வயது இளைஞன், தனது 77 வயது தாயின் சடலத்தோடு 18 நாட்கள் தங்கியிருந்துள்ளார்.

தனது வீட்டிலேயே தாயின் சடலத்தை 21வது நாள் நல்லடக்கம் செய்ய நண்பரை உதவிக்கு அழைத்த போதுதான் அவரது செயல் வெளி உலகத்துக்குத் தெரிய வந்தது.

மகன் மைத்ரியா பட்டாச்சாரியாவின் நண்பர் காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததை அடுத்து, காவலர்கள் வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கே ஒரு மர பீரோவை தரையில் படுக்கவைத்து, அதன் மீது 18 நாட்களுக்கு முன்பு இறந்த மைத்ரியாவின் 77 வயது தாயான கிருஷ்ணாவின் உடலை கிடத்தி வைத்திருந்ததை காவல்துறையினர் பார்த்தனர்.

இந்த சம்பவங்கள் பற்றி விவரிக்க காவல்துறைக்கு ஒரே ஒரு துப்புதான் கிடைத்துள்ளது. அது, அவரது ஓய்வூதிய அட்டை சுவரில் ஒட்டப்பட்டு, அதில் 'நௌ லேட்'  ('இப்போது இல்லை' ) என்று எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து மைத்ரியாவிடம் விசாரித்ததில், தாயின் சடலத்தை 21 நாட்கள் மக்க விட்டு, அதன்பிறகு வீட்டின் அருகே புதைக்க விரும்பியதாகவும், இந்த விஷயத்தை தானும், தாயும் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

உயிரிழந்த கிருஷ்ணா, மகளிர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும், மகன் மைத்ரியா பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காமல் பாதியில் நின்றவர் என்றும், 2013ம் ஆண்டு இதேப்போன்று சந்தேகத்துக்கு இடமான வகையில் அவரது தந்தையும், அறுவை சிகிச்சை நிபுணருமான கோராசந்த், வீட்டில் நடந்த பூஜையின் போது உடலில் தீப்பற்றி உயிரிழந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகிறார்கள்.

இதுபோன்ற பல்வேறு மர்மங்கள் நீடிப்பதால், அந்த வீடே ஒரு பயங்கர வீடாக அக்கம் பக்கத்தினருக்கு தற்போது மாறியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.