தில்லியில் மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய்க்கு ரூ.10.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டுக்கு செவ்வாய்க்கிழமை அர்ப்பணித்தனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 94ஆவது பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தில்லியில் ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தால் அருகே கட்டப்பட்டுள்ள வாஜ்பாய் நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டு, நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தனர். பின்னர் வாஜ்பாயின் நினைவிடத்தில் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, வாஜ்பாய் உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சுட்டுரையில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், பிறந்த தினத்தன்று வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்துகிறேன்; அவர் கனவு கண்டபடி, இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமராக கடந்த 1996ஆம் ஆண்டு, 1998 முதல் 1999 வரையிலும், 1999 முதல் 2004 வரையிலும் வாஜ்பாய் பதவி வகித்துள்ளார். தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல், ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தால் அருகே முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்த இடத்தின் அருகே மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம், வீட்டு வசதி துறை ஆகியவற்றுக்கு சொந்தமாக காலியாக இருக்கும் 1.5 ஏக்கர் நிலத்தில் வாஜ்பாய்க்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு சதைவ் அடல் என பெயரிடப்பட்டுள்ளது. நினைவிடம் அமைக்க ரூ.10.51 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியை அடல் ஸ்மிருதி நியாஸ் சமூகம் என்ற அறக்கட்டளை அளித்துள்ளது. இந்த அறக்கட்டளையின் தலைவர் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஆவார். அதன் நிறுவன உறுப்பினர்களாக பிகார் ஆளுநர் லால்ஜி தான்டன், குஜராத் ஆளுநர் ஒ.பி. கோலி, கர்நாடக ஆளுநர் வஜுபாய் ருதாபாய் வாலா, பாஜக மூத்த தலைவர்கள் விஜய் குமார் மல்கோத்ரா, ராம்லால் ஆகியோர் உள்ளனர். நினைவிடத்திலுள்ள சுவர்களில் வாஜ்பாயின் கவிதைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
மம்தா புகழாரம்
வாஜ்பாயின் 94ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வாஜ்பாயின் பிறந்த தினத்தன்று, அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். கட்சி பாகுபாடு கடந்து நாட்டின் நலனுக்காக உழைத்த சிறந்த தலைவர் அவர். அவரை நாம் இழந்து விட்டோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிஇசிஐஎல் நிறுனத்தில் பொறியாளர், டெக்னீசியன் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி!
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை குறைந்தது! (ஜூன் 24)
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



