பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி பாஜகவுக்கு சாதகமாக அமைவதுடன், அக்கட்சியே மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மறைமுகமாக உதவி புரிகிறார் என காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் கெளடா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மத்தியில் காங்கிரஸ்- பாஜக அல்லாத ஆட்சியை ஏற்படுத்த மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக, பிராந்திய கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான ஒடிஸாவின் நவீன் பட்நாயக், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி மற்றும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் தலைவர்களான அகிலேஷ் யாதவ், மாயாவதி போன்றவர்களை நேரில் சந்தித்து கூட்டாட்சி முன்னணியை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த முயற்சி பாஜகவுக்கே சாதகமாக அமைய வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் கெளடா நிருபர்களிடம் கூறியதாவது: பிராந்திய கட்சிகளை சேர்ந்த மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து கூட்டாட்சி முன்னணியை ஏற்படுத்த சந்திரசேகர் ராவ் எடுத்து வரும் முயற்சிகள் அனைத்தும் பாஜகவுக்குதான் சாதகமாக அமையும்.
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காக பிராந்திய கட்சிகள், மக்கள் செல்வாக்குள்ள கட்சிகளை ஒரே அணியில் ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதேசமயம், கூட்டாட்சி முன்னணி அமைந்தாலும், அவர்களால் ஆட்சியமைக்க முடியாது. இதனால், பாஜகவின் மோடி அரசே மீண்டும் ஆட்சியில் அமர வழிவகுக்கும்.
பாஜகவை வீழ்த்த வேண்டுமானால் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து வலுவான கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு பிராந்திய கட்சிகள் காங்கிரஸுடன் ஒருங்கிணைந்து மதசார்பற்ற கட்சிகளின் மெகாகூட்டணியை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் மூன்றாவது அணி உருவாகும்பட்சத்தில் வாக்குகள் சிதறி மோடி அரசே மீண்டும் அமைய வாய்ப்பு ஏற்படும். அதன் மூலம் ஜனநாயகம், பாதுகாப்பு, சமூக-கலாசார பாகுபாடுகள் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.
சந்திரசேகர் ராவ் தான் மேற்கொள்ளும் முயற்சியை கைவிட்டு, காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்தால் அதை வரவேற்போம். பாஜக கூட்டணியை வீழ்த்த நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும். ஏனெனில், காங்கிரஸால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சமூக நீதி வணக்கம்! முதல்வர் விஜய்

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! கட்டடங்கள் சேதம்!

தொடர்ந்து 3-வது நாளாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்? (ஜூன் 25)

பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


