ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி: ட்விட்டரில் ராகுல் வாழ்த்து

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்றதையடுத்து அக்கட்சித் தலைவர் ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி: ட்விட்டரில் ராகுல் வாழ்த்து

ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஜனவரி 29-ந் இடைத்தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வர் மற்றும் அஜ்மீர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், மண்டல்கர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இந்நிலையில், பிப்ரவரி 1-ந் தேதி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ராஜஸ்தான் மாநிலத்தின் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்றது.

மண்டல்கர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சக்தி சிங் ஹடா தாகர் 57,170 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விவேக் தாகர் 70,146 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

அஜ்மீர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 3,13,706 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரகு ஷர்மா 3,91,754 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

அதுபோல அல்வர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜஸ்வந்த் சிங் யாதவை விட காங்கிரஸ் வேட்பாளர் கரண் சிங் யாதவ் 1,56,319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

ராஜஸ்தான் தேர்தலில் சிறப்பாக பணியாற்றி வெற்றிபெற வைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு வாழ்த்துகள். உங்கள் ஒவ்வொருவரின் செயலும் என்னை பெருமைப்பட வைக்கிறது. ராஜஸ்தான் மாநில மக்கள் பாஜக-வை புறக்கணித்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com