தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிபிஐ காவலில் இந்திராணி முகர்ஜி

அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய முறைகேடு வழக்கில் தொழிலதிபர் இந்திராணி முகர்ஜியை 2 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதியுள்ளது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 7:45 pm

DIN

அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய முறைகேடு வழக்கில் தொழிலதிபர் இந்திராணி முகர்ஜியை 2 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதியுள்ளது. விசாரணைக்குப் பிறகு அவரை வரும் புதன்கிழமை (பிப்.7) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சொந்த மகள் ஷீனா போராவைக் கொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தற்போது விசாரணைக் கைதியாக இந்திராணி சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய விதிகளுக்குப் புறம்பாக வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கைகளைத் தவிர்க்க முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவியதாகக் கூறப்படுகிறது. அதற்காக சில ஆதாயங்களை அவர் பெற்றதாகவும் புகார்கள் உள்ளன.
இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. அதற்கான விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார். இந்நிலையில், இதுதொடர்பான வழக்கின் விசாரணை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, இந்திராணி முகர்ஜியை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதன் வாயிலாக வழக்கில் பல புதிய விவரங்கள் வெளிவரக்கூடும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், அந்த விவகாரம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திராணி முகர்ஜியை 2 நாள்கள் சிபிஐ காவலுக்கு அனுப்ப அவர் அனுமதியளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.