
அகமதாபாத்: உங்களுக்கு யாரேனும் ‘ஐ லவ் யூ’ சொல்லி இருக்கிறார்களா என்று பிரதமர் மோடியை, குஜராத்தினைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவாணி டிவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.
உலகம் முழுவதும் புதனன்று காதலர் தினம் மொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் காதலர் தின கொண்டாட்டங்கள் என்பது இந்தியாவின் கலாச்சாரம் கிடையாது என்று கூறி பஜ்ரங்தள், இந்து சேனா உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் சில மாநிலங்களில் காதலர்களை தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏவான ஜிக்னேஷ் மேவானி தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று காதலர் தினத்தினை முன்னிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடிக்கு இதுவரை யாரேனும் ஐ லவ் யு சொல்லி இருக்கிறார்களா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஆனால் ஏராளமானோர் எனக்கு ஐ லவ் யு சொல்லி இருக்கிறார்கள்
இந்தியர்கள் எப்போதும் வெறுப்புணர்வைக் காட்டிலும், அன்பு செலுத்துவதையே அதிகமாக விரும்புவார்கள். மலையாளத்தில் தற்பொழுது மிகவும் பிரபலமாக இருக்கும் ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் ‘மணிக்கிய மலரய பூவே’பாடல்தான் காதலர் தினத்தில் போராட்டம் நடத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் அதனைச் சார்ந்த பிற அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் பதிலாக இருக்கும். இந்த அழகான வீடியோவை பார்த்து ரசியுங்கள்
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். அவரது இந்த பதிவின் கிண்டல் தொனி பரவலாக அனைவராலும் ரசிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.