

புதுதில்லி: சரக்கும் மற்றும் சேவை வரி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாகவும் பொதுமக்களின் மீது வரிச் சுமையை அதிகரித்துள்ளது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை என்பதன் அடிப்படையில் கடந்தாண்டு ஜூலை 1-ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஜிஎஸ்டி தினமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. சரக்கும் மற்றும் சேவை வரியால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையால் நாட்டின் வேலை வாய்ப்பு சீர் குலைந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். சரக்கு மற்றும் சேவை வரியின் வடிவமைப்பு, கட்டமைப்பு முறை, உள்கட்டமைப்பு, வரி விதிப்பு மற்றும் அமல்படுத்தப்பட்ட விதம் ஆகியவற்றால் தொழிலதிபர்கள், வணிகர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வரிச்சுமையை உயர்த்தி ஜிஎஸ்டி என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாக மாறியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
சாதாரண மக்களின் வரிச்சுமையை குறைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டியால், மேலும் வரிச்சுமையை ஏற்றியுள்ளது.
மேலும், ஜிஎஸ்டி தங்களது வரிச்சுமையை அதிகரித்துள்ளது என சாமானிய மக்களும் உணர்கின்றனர். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் ஒரு கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை பறித்துள்ளது. ஜிஎஸ்டி வரிக்குறைக்கப்படுவதை உறுதிப்படுத்தவில்லை என்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் மகிழ்ச்சியடைந்த ஒரே பிரிவினர் வரித்துறையினர்தான், அவர்களுக்கு வானாளவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சிதம்பரம் கூறினார்.
ஜிஎஸ்டி விவகாரத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகரின் பல ஆலோசனைகளை புறக்கணித்துவிட்டு நிறைவேற்றப்பட்டதாகவும் சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.