ஆண் துணை இல்லாமல் ஹஜ் பயணம் செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.
ஹஜ் பயணம் செல்லும் மொத்த இந்தியர்களில் 47 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்லும் பெண்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு இந்த ஆண்டு உயர்ந்துள்ளதாக சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வரை, முஸ்லிம் பெண்கள் அனைவரும் தங்களது வாழ்க்கைத் துறை அல்லது பாதுகாவலருடன் மட்டுமே சௌதி அரேபியாவில் உள்ள ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முடியும். ஆனால் இந்த விதி தளர்த்தப்பட்டதால் முதல் முறையாக பெண்கள், ஆண் துணை இல்லாமல் ஹஜ் பயணம் செய்வது இந்த ஆண்டுதான்.
இந்த விதியின்படி, 45 வயதை எட்டிய பெண்கள் குழுவாக ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரத்தநாட்டில் காவல் ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவையாறு தியாகராஜரின் 259 ஆவது ஜெயந்தி விழா

இன்ஃபோசிஸ் சிஇஓ-க்கு ரூ.52 கோடி ஊக்கத்தொகை: பங்குச்சந்தையில் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


