கதுவா வழக்கு: குற்றவாளிகளை பஞ்சாப் சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

கதுவா சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கதுவா மாவட்ட சிறையில் இருப்பவர்களை குருதாஸ்பூர் மாவட்ட சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கதுவா வழக்கு: குற்றவாளிகளை பஞ்சாப் சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read


புது தில்லி: கதுவா சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கதுவா மாவட்ட சிறையில் இருப்பவர்களை குருதாஸ்பூர் மாவட்ட சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கதுவா சிறுமி வழக்கு தொடர்பான மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் பல பரபரப்பு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை, கதுவா மாவட்ட சிறையில் இருந்து பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டசிறைச்சாலைக்கு மாற்றவும், 8 வார காலத்துக்குள் கதுவா சிறுமி வழக்கில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிமன்ற நீதிபதி மற்றும் சிறப்பு அரசு வழக்குரைஞருக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com