கெளரிலங்கேஷ் கொலை வழக்கில், மேலும் 2 பேரை சிறப்புப் புலனாய்வுப் படையினர் (எஸ்ஐடி) கைது செய்தனர்.
பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-இல் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்தக் கொலை வழக்கை சிறப்புப் புலனாய்வுப் படை(எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.
இதுதொடர்பாக பரசுராம் வாக்மோரே உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சந்தேகப்படும் மேலும் இருவரை சிறப்புப் புலனாய்வுப் படையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்கள் ஹுப்பள்ளியைச் சேர்ந்த அமித் ராகவேந்திரபட்டி, கணேஷ்மிஸ்கி ஆகியோர் என உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய்வுப்படையின் விசாரணை அதிகாரி எம்.என். அனுசேத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:-
இருவரையும் மாநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். கூடுதல் விசாரணைக்காக இருவரையும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை சிறப்புப் புலனாய்வுப் படையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இருவரின் பங்களிப்பை தற்போது வெளியிட இயலாது என்றார் அவர். எனினும், கெளரிலங்கேஷை கொலை செய்வதற்கு முன்பாக அவர் வசித்துவந்த இடத்தை இருவரும் நோட்டம் விட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில், அமித் ராகவேந்திரபட்டி பொற்கொல்லர் வேலை செய்து வந்ததாகவும் கணேஷ் மிஸ்கி, ஊதுவத்தி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் சிறப்புப் புலனாய்வுப் படையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் அமித் ராகவேந்திரபட்டி, கணேஷ் மிஸ்கி தவிர கே.டி.நவீன்குமார், அமோல்காளே, அமித் தேக்வேகர், பரசுராம் வாக்மோரே, சுஜித்குமார், மனோகர் எடவே, மோகன் நாயக் ஆகிய 9 பேரை கைதுசெய்துள்ளனர். கெளரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டதாக பரசுராம்வாக்மோரே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 9 பேருக்கும் பகுத்தறிவாளரும், எழுத்தாளருமான எம்.எம்.கலபுர்கி கொலைக்கும் சம்பந்தமிருப்பதாக காவல்துறை சந்தேகப்படும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் சிபிஐ தலைவர் கோவிந்த் பன்சாரே, பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் ஆகியோரின் படுகொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்பதை சிறப்புப் புலனாய்வுப் படை ஆராய்ந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குகள் 5 சதவீதம் சரிவு!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்? அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு
தாயாவதை உறுதி செய்தார் சமந்தா! மகப்பேறு விடுமுறை எடுப்பதாகப் பேச்சு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


