விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

நாட்டில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு பெண்களுக்கு இல்லை: சிவசேனை விமர்சனம்

நாட்டில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு பெண்களுக்கு இல்லை என்று பாஜகவை சிவசேனை கட்சி விமர்சித்துள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2018, 1:08 am IST

நாட்டில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு பெண்களுக்கு இல்லை என்று பாஜகவை சிவசேனை கட்சி விமர்சித்துள்ளது.
இதுகுறித்து சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா'வுக்கு அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் சிவசேனை அங்கம் வகிக்கிறது. இருப்பினும், தவறு ஏதேனும் நடைபெற்றால், அதை எதிர்த்து சிவசேனை குரல் கொடுக்கும். எங்கள் கட்சி, பாஜகவின் நட்பு கட்சியாகும். வேறு கட்சிகளுடன் எங்களுக்கு நட்பு கிடையாது.
நாட்டில் நடக்கும் கும்பல் கொலை குறித்து கேட்கிறீர்கள். பாஜகவின் ஹிந்துத்துவா சித்தாந்தமானது போலியானது. பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் தாக்குதல்களை தடுக்கும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தோல்வியடைந்து விட்டது. நாட்டில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட, பெண்களுக்கு இல்லை.
பசுவை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், மக்கள் மாட்டிறைச்சியை உண்கிறார்களா? இல்லையா? என்ற கண்காணிப்பில் ஈடுபடுவது அவமானகரமான செயலாகும். 
நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், பசுக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணி நடக்கிறது. எனது இந்த கருத்தை வைத்து, பசுவதையை நாங்கள் ஆதரிப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. பசுக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் அதே வேளையில், உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா உருவாகியுள்ளது. இதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்.
தேசியவாதம் குறித்து பாஜக பேசுகிறது. யார் தேசியவாதிகள்? யார் தேசவிரோதிகள்? என்று முடிவு செய்ய பாஜகவுக்கு உரிமை கிடையாது. அரசை விமர்சிப்பவர்கள் தேச விரோதிகள் ஆகிவிட மாட்டார்கள்.
ஏழைகள் நலன்களை பாதுகாக்காத முடிவுகளை சிவசேனை கட்சி எதிர்க்கிறது. மத்திய அரசு ஏதேனும் தவறான முடிவை எடுக்கும்பட்சத்தில், அரசை நான் விமர்சிக்கிறேன். பாஜகவின் ஆதரவை பெறுவதற்காக அவர்களை திருப்திப்படுத்தும் செயலில் நான் ஈடுபட மாட்டேன். மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டது. அதையடுத்து மத்தியில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த அரசும், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசை போல்தான் செயல்படுகிறது என்றார் உத்தவ் தாக்கரே.
மத்தியிலும், மகாராஷ்டிர மாநிலத்திலும் அமைந்துள்ள பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் சிவசேனையும் அங்கம் வகிக்கிறது. இருப்பினும், மத்திய, மகாராஷ்டிர அரசுகளை சிவசேனை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. 2019ஆம் ஆண்டு மக்களவை, மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் தனித்து போட்டியிடப் போவதாகவும் சிவசேனை அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.