காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் ஆட்சேபம் எதுவுமில்லை என்று மஜத தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
புதுதில்லியில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மதச் சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் ஆட்சேபம் எதுவுமில்லை. அதற்கு மஜத கட்சி உறுதுணையாக இருக்கும்.
பிரதமர் பதவிக்கான போட்டியில் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோரும் உள்ளனர்.
தோழமை கட்சிகள் ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இருந்தாலும், ராகுலுக்கே மஜத ஆதரவு அளிக்கும்.
கர்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், மஜத ஆகிய இரு கட்சிகளும் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை.
இருந்தபோதிலும் இருகட்சிகளிடையே கூட்டணி அமைத்து மஜத கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமியை முதல்வர் ஆக்க, ராகுல் காந்தி உறுதுணையாக இருந்தார் என்பதை மறக்க முடியாது என்றார் தேவெ கௌடா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீா் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்

மருத்துவா்களை நியமிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.27 கோடி

தீயனூா், மேலாய்க்குடி கண்மாய்களிலிருந்து மண் எடுக்கும் பணி நிறுத்தம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



