பெங்களூரு: கர்நாடக அமைச்சரவையின் ஒரே பெண் அமைச்சராக, முன்னாள் நடிகையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஜெயமாலா சேர்க்கப்பட்டுள்ளார்.
குமாரசாமி தலைமையிலான கர்நாடகா கூட்டணி அமைச்சரவையில் புதிய அமைச்சராக காங்கிரஸின் ஜெயமாலா புதனன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கர்நாடக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திரைத்துறையினை சேர்ந்த ஒருவர் நேரடியாக அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்வது இதுவே முதன்முறையாகும்.
இவருக்கு முன்னதாக அனந்தநாக், உமாஸ்ரீ மற்றும் குமார் பங்காரப்பா உள்ளிட்டோர் துணை அமைச்சர்களாகவே முதலில் அரசில் பங்கேற்றுள்ளனர். ஜெயமாலா தற்பொழுது கர்நாடக சட்டப்பேரவையின் மேலவை உறுப்பினராக உள்ளார்.
அமைச்சராக பதவியேற்றுள்ளது பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மூன்று விஷயங்களை முதன் முறையாகச் செய்தவள் என்ற பெருமை எனக்கு உண்டு. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் கரநாடகாவின் 'பில்லவா' சமூகத்திலிருந்து கர்நாடக மேலவைக்கு தேர்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினர்; கன்னட திரைத்துறையிலிருந்து தனிப் பொறுப்புடன் அமைச்சரவையில் பங்கேற்கும் முதல் உறுப்பினர் மற்றும் கர்நாடக சட்டப் பேரவையின் மேலவை குழுத் தலைவராக தேர்தெடுக்கப்பட உள்ள பெண் ஆகியவை எனது சிறப்புகளாகும்.
நான் பொதுவாக எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. எனது திறமைக்கு அங்கீகாரமாகவே பதவிகளை அளிக்கிறார்கள். எனக்கு சட்ட விவகாரங்கள் துறை கிடைக்கும் என்று நினைக்கிறேன். எந்த துறை அளிக்கப்பட்டாலும் பணிபுரியத் தயாராக இருக்கிறேன். பெண்கள் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் பொறுப்புகளை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கர்நாடகாவின் மற்ற சில நடிகர்களை போல கட்சிகளை மாற்றிக் கொண்டே இருக்காமல் அரசியலில் ஈடுபட்டது முதல் காங்கிரஸிலேயே தொடந்து இருந்து வருகிறார். அதேசமயம் சபரிமலையில் கோவிலுக்குள் சென்றதாக இவர் மீது எழுந்த குற்றச்சாட்டால் சர்ச்சை உண்டானது நினைவிருக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


