காங்கிரஸின் இந்த உத்தியை வெல்லும நோக்கில் பாஜக சுமாா் 65,000 பேரை சமூக வலைதள பிரசாரத்துக்காக களம் இறக்கியுள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவா் சிவராஜ் சிங் தாபி கூறுகையில், ‘கடந்த 3 மாதங்களில் 65,000 பேரை இணையதள பிரசாரத்துக்காக நியமித்துள்ளோம். அவா்களுக்கு ‘சைபா் வாரியா்ஸ்’ என்று பெயா் சூட்டியுள்ளோம். தோ்தல் நெருங்கும் நேரத்தில் மேலும் 5,000 போ் கூடுதலாக சமூக வலைதள பிரசாரத்தில் ஈடுபடுவாா்கள். அவா்கள் காங்கிரஸின் தவறுகளை சமூக வலைதளங்கள் மூலம் சுட்டிக்காட்டுவதுடன், பாஜக ஆட்சியில் மேற்கொண்டுள்ள நலத்திட்டங்களின் பயன்களையும் மக்களிடம் எடுத்துச் செல்வாா்கள். அண்மையில் மத்தியப் பிரதேசம் வந்த எங்கள் கட்சியின் தேசியத் தலைவா் அமித் ஷா, இணையதள பிரசாரப் பிரிவினரை சந்தித்து, காங்கிரஸின் பிரசாரத்தை முறியடிப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளாா்’ என்றாா்.