பாட்டியைக் காண ராகுல் இத்தாலி பயணம்

ஹோலிப் பண்டிகையையொட்டி தனது பாட்டியைச் சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இத்தாலிக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றார். இந்த வார இறுதியை அவருடன் கழிக்கப் போவதாகவும்
பாட்டியைக் காண ராகுல் இத்தாலி பயணம்
Updated on
1 min read

ஹோலிப் பண்டிகையையொட்டி தனது பாட்டியைச் சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இத்தாலிக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றார். இந்த வார இறுதியை அவருடன் கழிக்கப் போவதாகவும், ஆனந்த அதிர்ச்சியளிக்கப் போவதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் (டுவிட்டர்) இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை நல்வாழ்த்துகள். எனது பாட்டிக்கு 93 வயதாகிறது. கணிவும், அன்பும் நிறைந்த அவரைக் காண இத்தாலி செல்கிறேன். அங்கு சென்று அவருக்கு ஆனந்த அதிர்ச்சியளிப்பதுடன், அன்புடன் அரவணைக்கவும் காத்திருக்கிறேன் என்று அதில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
ம.பி.தேர்தல் வெற்றி: முன்னதாக, மத்தியப் பிரதேசத்தின் இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது புதிய மாற்றத்துக்கான தொடக்கம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், தேர்தல் முடிவுகளானது முறைகேடான ஆட்சி நிர்வாகத்துக்கும், அடக்குமுறைகளுக்கும் கிடைத்த தோல்வியைக் குறிக்கின்றன என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com