புதுதில்லி: தற்பொழுது புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவது குறித்து மக்களவையில் கேட்டகப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது புழக்கத்தில் உள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மத்திய அரசு தடை செய்யுமா அல்லது புழக்கத்தில் இருந்து வாபஸ் பெற்று விடுமா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது:
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்பப் பெறும் எண்ணமோ அல்லது தடை செய்யும் எண்ணமோ இல்லை.
அதேசமயம் கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வர் உள்ளிட்ட முக்கியமான 5 நகரங்களில் 10 ரூபாய் பிளாஸ்டிக் கரன்சிகளை புழக்கத்தில் விட முடிவு செய்துள்ளோம். ஆனால் இது எப்போது புழக்கத்தில் விடப்படும் என்று ற முடியாது.
இவ்வாறு அவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |

தேர்வர்களுக்கு ஏமாற்றம்.. காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

கனடா காட்டுத்தீயினால் புகை மண்டலமாக மாறியுள்ள நியூ ஜெர்ஸி..! ஸ்பெயின் அணியின் பயிற்சி பாதிப்பு!

ஓபராய் ரியால்ட்டியின் காலாண்டு லாபம் 29% உயர்வு!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



