புதுதில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அதிமுக எம்.பிக்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று அதிமுக மாநிலங்களவை எம்பி நவநீதகிருஷ்ணன் ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பினை சமயத்தில் வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆறு வார கால அவகாசம் அளித்திருந்தது. அநத அவகாசம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. ஆனால் இன்னும் இது தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தினை மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தி அதிமுக எம்.பிக்கள் கடந்த 16 நாட்களாக நாடாளுமன்றத்திற்கு முடக்கி வருகின்றனர். இதுபோல் பல்வேறு எதிர்கட்சிகளின் போராட்டம் காரணமாக நாடாளுமன்றம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநிலங்களவையில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் புதன்கிழமை மதியம் காவிரி விவகாரம் குறித்து பேசினார். அப்பொழுது அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அதிமுக எம்.பிக்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அதிமுக எம்.பிக்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நிறைவேற்ற இயலாவிட்டால் அரசியல் சாசனம் எதற்கு உள்ளது? அரசியல் சாசனம் செத்து விட்டது.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் எங்களை ராஜிநாமா செய்யுமாறு வற்புறுத்துகின்றனர். எனவே நாங்கள் இந்த விவகாரத்தில் தற்கொலை செய்து கொள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


