தலித் மக்கள் மீதான வன்முறையினைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தீர்கள்: பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு  

நாடு முழுவதும் நடைபெற்ற தலித் மக்கள் மீதான வன்முறையினைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தீர்கள் என்று பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தலித் மக்கள் மீதான வன்முறையினைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தீர்கள்: பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு  

பெங்களூரு: நாடு முழுவதும் நடைபெற்ற தலித் மக்கள் மீதான வன்முறையினைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தீர்கள் என்று பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக அவுரத் என்னும் இடத்தில் தனது இரண்டு நாள் சுற்றுப் பயணத்தினை காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி வியாழன் அன்று துவக்கினார்.  அதேசமயம் வியாழன் அன்று மூன்று இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசினார். அத்துடன் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் கர்நாடகாவில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் நடைபெற்ற தலித் மக்கள் மீதான வன்முறையினைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தீர்கள் என்று பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

கல்கி நகரில் வெள்ளியன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி தலித்துகள் நிலை குறித்து வருத்தப்படுவது போல், வேதனைப்படுவதுபோல் முதலைக் கண்ணீர் வடிக்கிறார். ஆனால் சமீப காலமாக நாடு முழுவதும் தலித்துகள் உயர் சாதியினராலும், பாஜகவினராலும் தாக்கப்பட்டபோது, மோடி மவுனமாக வேடிக்கை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருந்தார். அதைக் கண்டித்து எதுவுமே பேசவில்லையே?

குறிப்பாக உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச, மஹாராஷ்டிரா, மாநிலங்களில் பாஜகவினரும், இந்து அமைப்புகளினால், தலித் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்ட பொழுது, மோடி ஒரு வார்த்தை கூட  பேசவில்லை.

இந்தியாவிலேயே கர்நாடக காங்கிரஸ் அரசு மட்டுமே, மத்திய அரசு தலித்துகள், பழங்குடியினருக்கு ஒதுக்கிய பணத்தில் பாதியளவு முறைப்படி செலவு செய்து இருக்கிறது.

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பொழுது மத்திய அரசுக்கு கிடைத்த  கோடிக்கணக்கான பணத்தை ஏழை மக்களுக்காகச் செலவிடாமல், மோடி குறிப்பிட்ட 10 தொழில் அதிபர்களின் நலனுக்காக மட்டுமே செயல்பட்டார்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com