காவிரி விவகாரம்: மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் 

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
காவிரி விவகாரம்: மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் 

புதுதில்லி: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, காவிரியில் இருந்து கர்நாடக அரசு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை செயல்படுத்த இயலாது என்று அப்போதே கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைaக்கேட்ட நீதிமன்றம், விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.

காவிரி வழக்கு செவ்வாயன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் கர்நாடக அரசு திங்கள் அன்று விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கடந்த பருவ மழை காலத்தில், கர்நாடக மாநிலத்துக்கு மழை பற்றாக்குறையால் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் வரை காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 116.74 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

வறட்சி காலத்தில் வழங்கப்பட்டதை விட தற்போது 16.66 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டிய அவசியம் இல்லை என்றும், தற்போது கர்நாடகத்தின் தேவைக்கு மட்டுமே காவிரியில் தண்ணீர் இருப்பதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட இயலாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் இந்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக இதுவரை மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விரிவாக அதில் பதிவு செய்துள்ளனர். அத்துடன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை முழுமையாக  அமல்படுத்த அணைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என்று அந்த பிரமாணப் பாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நீதிமன்றம் முன்னரே தெரிவித்திருந்தபடி 'திட்டம்' எதுவும் அளிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. நாளைய விசாரணையின் பொழுது முழுமையான விபரங்கள் தெரிய வரும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com