போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளும், மறுக்கும் நிலையில் இல்லை: தேவே கௌடா

தற்போதைய சூழ்நிலையில் எதையும் ஏற்றுக்கொள்ளும், மறுக்கும் நிலையில் இல்லை என ஜேடிஎஸ் கட்சித் தலைவர் தேவே கௌடா ஞாயிற்றுக்கிழமைதெரிவித்துள்ளார்.

News image
Updated On :13 மே 2018, 10:46 am

தற்போதைய சூழ்நிலையில் எதையும் ஏற்றுக்கொள்ளும், மறுக்கும் நிலையில் இல்லை என ஜேடிஎஸ் கட்சித் தலைவர் தேவே கௌடா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து வெளியிடப்பட்டு வரும் கருத்துக்கணிப்புகளில் பல்வேறு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இருப்பினும் அடுத்த ஆட்சி அமைப்பதில் ஜேடிஎஸ் முக்கியப் பங்கு வகிக்கும் என்று இவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜேடிஎஸ் கட்சித் தலைவர் தேவே கௌடா, செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தற்போதைய சூழ்நிலையில் நான் எதையும் ஏற்றுக்கொள்ளும், மறுக்கும் நிலையில் இல்லை. எதுவாக இருந்தாலும் மே 15-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை வரை காத்திருக்க வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை தெரிய வரும். 

கர்நாடகாவில் அடுத்த அமையப்போகும் ஆட்சி அமைக்க நாங்கள் முக்கியப் பங்கு வகிப்போம் என்னும் நம்பிக்கை எனக்கு உள்ளது. அதுபோன்ற வாய்ப்பு கிடைத்தால் அதை சிறப்பாகச் செய்வோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.