பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.13, 492 கோடி நிதி மோசடி செய்த விவகாரம் தொடர்பான வழக்கில், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ திங்கள்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில், நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும், அலாகாபாத் வங்கியின் தலைமைச் செயலதிகாரியாக தற்போது இருப்பவருமான உஷா அனந்த சுப்பிரமணியன், நீரவ் மோடியின் சகோதரர் நிஷால் மோடி, நீரவ் மோடி நிறுவன அதிகாரி துபாஷ் பரப் ஆகியோரின் பெயர்கள் உள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் கே.வி. பரம்ஜி ராவ், சஞ்சீவ் சரண், பொது மேலாளர் நேஹால் அஹத் ஆகியோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இருக்கின்றன.
குற்றப்பத்திரிகையில் நீரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் மோடி, சுபாஷ் பரப் ஆகியோருக்கு நிதி மோசடியில் இருக்கும் தொடர்புகள் குறித்து சிபிஐ விரிவாக குறிப்பிட்டுள்ளது.
ரூ.6 ஆயிரம் கோடி மதிப்புக்கு கடன் உறுதிப் பத்திரங்கள், டைமண்ட் ஆர் யு.எஸ்., சோலார் எக்ஸ்போர்ட், ஸ்டெல்லர் டைமண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், இந்த குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில், நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்ஸிக்கு, நிதி மோசடியில் இருக்கும் தொடர்பு குறித்து சிபிஐ குறிப்பிடவில்லை.
கீதாஞ்சலி நிறுவனம் தொடர்பான விவகாரத்தில் சிபிஐ தாக்கல் செய்ய இருக்கும் துணை குற்றப்பத்திரிகையில், அவர் குறித்த விவரங்களை தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது என்று சிபிஐ அதிகாரிகள் வட்டாரங்கள் குறிப்பிட்டன.
முன்னதாக, பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் நீரவ் மோடி, சோக்ஸி ஆகியோருக்கு எதிராக சிபிஐ அமைப்பிடம் ரூ.13,492 கோடி மதிப்புக்கு நிதி மோசடி புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, நீரவ் மோடி, சோக்ஸி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ தனித்தனியாக 3 முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.
எனினும், சிபிஐ அமைப்பிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளிப்பதற்கு முன்னரே, நீரவ் மோடியும், சோக்ஸியும் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக கூட்டணி வென்றால் பாஜக ஆட்சிதான் நடக்கும்: தொல்.திருமாவளவன்

பண்ருட்டியில் மல்லை சத்யா பிரசாரம்

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வஉசி பேரவை ஆதரவு

ஹாட்ரிக் வெற்றிக்கு தீவிரம் காட்டும் திமுக! சுழற்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் அமமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


