மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

17 ஆயிரம் வாக்குகள் பின்தங்கிய சித்தராமையா

சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். 

News image
Updated On :15 மே 2018, 5:51 am

கர்நாடக சட்டப் பேரவைக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடந்தது. மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதியில் 2 தொகுதியை தவிர்த்து 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்த வாக்குகள் எண்ணும் பணி மே 15-ஆம் தேதி (இன்று) காலை 8 மணிக்கு தொடங்கியது. 

அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க பெங்களூருவில் 18 ஆயிரம் போலீசார் உள்பட மாநிலம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், கர்நாடக ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தொடக்கத்தில் பின்தங்கிய பாஜக பின்னர் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு 121 தொகுதிகள் வரை முன்னிலைப் பெற்று வருகிறது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இந்நிலையில், சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். அங்கு போட்டியிடும் மஜத கட்சியின் வேட்பாளர் ஜிடி.தேவெ கௌடாவை விட 17 ஆயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார். இதனால் இந்த தொகுதியில் சித்தராமையா தோற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

அகந்தை, அனைவருடனும் பகை மற்றும் வீண் பேச்சு காரணமாகவே சித்தராமையாவை மக்கள் புறக்கணித்துவிட்டதாக மஜத கட்சியின் வேட்பாளர் ஜிடி.தேவெ கௌடா தெரிவித்துள்ளார். மேலும் அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான பதாமியில் 160 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.