ரம்ஜான் நோன்பைக் கைவிட்டு இந்து சிறுவனுக்கு ரத்த தானம் செய்த இஸ்லாமியர்: மதத்தை வென்ற மனிதநேயம் 

பிகாரில் ரம்ஜான் நோன்பைக் கைவிட்டு இந்து சிறுவனுக்கு இஸ்லாமிய வாலிபர் ஒருவர் ரத்த தானம் செய்த சம்பவம், அனைவரது மனதினையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரம்ஜான் நோன்பைக் கைவிட்டு இந்து சிறுவனுக்கு ரத்த தானம் செய்த இஸ்லாமியர்: மதத்தை வென்ற மனிதநேயம் 
Published on
Updated on
1 min read

பாட்னா: பிகாரில் ரம்ஜான் நோன்பைக் கைவிட்டு இந்து சிறுவனுக்கு இஸ்லாமிய வாலிபர் ஒருவர் ரத்த தானம் செய்த சம்பவம், அனைவரது மனதினையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள குச்சைக்கோடே என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவரின் எட்டு வயது மகன் ராஜேஷ். இச்சிறுவனுக்கு தலசீமியா என்ற ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் உள்ளது. இந்த நோய்  வந்தவர்களுக்கு மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு ஒரு முறை ரத்தத்தினை  மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்நிலையில் ராஜேஷூக்கு  செவ்வாயன்று திடீர உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவனது தந்தை அவனை உடனே அங்கிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள சடர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் அங்கே ரத்த வங்கியில் போதுமான ரத்தம் இல்லை என்றும், ரத்தம் கிடைக்க இரண்டு மூன்று நாட்களாகுமென்றும் தெரிவித்தனர். இதன் காரணமாக ராஜேஷின் தந்தை செய்வதறியாது திகைத்தார். அப்பொழுது அந்த மருத்துவமனையில் துப்புரவுப் பணியிலிருக்கும் ஒருவர் மூலமாக "மாவட்ட ரத்த தானம் செய்வோர் அணி' பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.

அந்த அணியின் தலைவரான அன்வர் ஹுஸைன், அதே வகை ரத்தம் உள்ளவரும் , அவர்களது அணி உறுப்பினருமான ஜாவெத் ஆலம் என்பவரை இதற்காக மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் தான் ரம்ஜான் மாத நோன்பிலிருப்பதாக ஆலம் கூறியுள்ளார். ஆனால் அவரை சமாதானம் செய்த அன்வர் ஹுஸைன், மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களை சந்தித்து ஆலோசிக்கும்படி கூறியுளளார்.

மருத்துவமனையிலும் ஜாவெத் ஆலமிடம் அவர் நோன்பிலிருப்பதாக தெரிந்தவுடன் அவரிடம் இருந்து ரத்தம் பெற முதலில் மருத்துவர்கள் மறுத்து விட்டனர். ஆனால் பின்னர் அவர்களின் அறிவுரைப்படி, ஆலம் தனது நோன்பைக் கைவிட்டு சிறிது பழச்சாறு மற்றும் உணவு வகைகளைச் சாப்பிட்டார். அதன் பின்னர் அவர்கள் ரத்தம் எடுத்து ராஜேஷுக்கு செலுத்தினார்.

இது பற்றி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆலம், "சக மனிதனுக்கு உதவி செய்யும் படி எனது மதம் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. எனவேதான் நான் எனது நோன்பைக் கைவிட்டு ராஜேஷுக்கு உதவினேன். மனிதநேயமே மற்ற எல்லாவற்றையும் விட மேலானது" என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com