தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தில்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Updated On :

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் நேற்று (புதன்கிழமை) தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்ததது. 

இந்நிலையில், முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் முடிவில் ஜூன் 3-ஆம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிதம்பரம் நேற்று ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலும் முன்ஜாமீன் கோரி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கிலும் அவரை ஜூன் 5-ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து அந்த நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு

2007-இல் சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக செயல்பட்டு வந்தார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த வழக்கில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.  

இதையடுத்து, கார்த்தி சிதம்பரம் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.