சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருமணமாகி ஆறு மாதங்களில் விவாகரத்து கோரி லாலு மகன் நீதிமன்றத்தில் மனு 

திருமணமாகி ஆறு மாதங்களில் விவாகரத்து கோரி லாலு பிரசாத் யாதவின் மகன்  தேஜ்பிரதாப் யாதவ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

News image
Updated On :2 நவம்பர் 2018, 3:58 pm

DIN

பாட்னா: திருமணமாகி ஆறு மாதங்களில் விவாகரத்து கோரி லாலு பிரசாத் யாதவின் மகன்  தேஜ்பிரதாப் யாதவ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும் , பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்தின் மகன் தேஜ்பிரதாப் யாதவுக்கும், பிகார் எம்எல்ஏ சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. 

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில், அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் குடும்ப சகிதமாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் திருமணமாகி ஆறு மாதங்களில் விவாகரத்து கோரி லாலு பிரசாத் யாதவின் மகன்  தேஜ்பிரதாப் யாதவ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 
 
இதுதொடர்பான விசாரணை நவம்பர் 29 தேதி பாட்னா குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. விவகாரத்துக்கான காரணம் என்னவென்று வெளியில் தெரியவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.