கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சபரிமலைக்குள் பக்தர்கள், ஊடகவியலாளர்களை தடுக்கக் கூடாது: கேரள உயர் நீதிமன்றம்

சபரிமலைக்குள் பக்தர்களையோ ஊடகவியலாளர்களையோ தடுக்கக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :5 நவம்பர் 2018, 4:18 pm IST


சபரிமலைக்குள் பக்தர்களையோ ஊடகவியலாளர்களையோ தடுக்கக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாதப் பிறப்பை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளன.

அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு இரண்டாவது முறையாக கோயில் நடை திறக்கப்பட உள்ளது. 10 - 50 வயதுடைய பெண்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கோயிலுக்குள் பக்தர்களையோ, ஊடகவியலாளர்களையோ நுழைய தடை விதிக்கக் கூடாது என்றும், உரிய பூஜைகளை உரிய நேரத்தில் செய்யுமாறும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.