முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு வாரத்தின் முதல் நாள்! பங்குச் சந்தைகள் சரிவு தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்? சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
/

மிஸோரம் சட்டப் பேரவைத் தலைவர் ராஜிநாமா: பாஜகவில் இணைந்தார்

மிஸோரம் மாநில சட்டப் பேரவைத் தலைவர் ஹிப்கி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மேலும், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டார்.

News image
Updated On :6 நவம்பர் 2018, 1:12 am IST


மிஸோரம் மாநில சட்டப் பேரவைத் தலைவர் ஹிப்கி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மேலும், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டார்.
வடகிழக்கு பிராந்தியத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலமான மிஸோரமில் வரும் 28-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில், அக்கட்சியில் இருந்து முக்கியத் தலைவர்கள் பலர் விலகி பாஜகவில் இணைவது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கெனவே, ஒரு அமைச்சர் உள்பட 4 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து அண்மையில் விலகினர்.
இந்நிலையில், மாநில சட்டப் பேரவைத் தலைவரும், கட்சியின் மூத்த தலைவருமான ஹிப்கி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக திங்கள்கிழமை அறிவித்தார். 
அவர் தனது ராஜிநாமா கடிதத்தை சட்டப் பேரவைத் துணைத் தலைவர் ஆர்.லால்ரினாவ்மாவுக்கு அனுப்பி வைத்தார். அவரும் அதனை ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியில் இருந்து விலகியது மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹிப்கி, பாஜகவில் இணைந்துவிட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மிúஸாரம் மாநிலத்தில் தன்னாட்சி பெற்ற மாவட்ட கவுன்சில்களுக்கு கூடுதல் அதிகாரம் தருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாக்குறுதி அளித்துள்ளார். 
மிúஸாரம் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடையப் போவது உறுதி. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்றார்.
ஹிப்கி காங்கிரஸ் சார்பில் இருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். தற்போதைய சட்டப் பேரவையில் பாலக் தொகுதி எம்எல்ஏவாக அவர் இருந்தார். பாஜக சார்பில் இதுவரை அத்தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எனவே, ஹிப்கி அத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், முக்கியத் தலைவர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருவது, மாநிலத்தில் காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.