எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வெளிநாட்டினருக்குத் தடுப்புக்காவல்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

வெளிநாட்டினரைத் தடுப்புக்காவலில் வைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கி வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், தற்போது தடுப்புக்காவலில்

Updated On :6 நவம்பர் 2018, 1:00 am IST


வெளிநாட்டினரைத் தடுப்புக்காவலில் வைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கி வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், தற்போது தடுப்புக்காவலில் உள்ள வெளிநாட்டினர், அவர்களது குடும்பத்தினரைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள தடுப்புக்காவல் மையங்களின் நிலை குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே, நடைபெற்ற விசாரணையில், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினர், அவர்களது குடும்பத்தாரிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டிருப்பற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இது குறித்த விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோக்குர், ஏ.எம்.கான்வில்கர், ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது, வெளிநாட்டினரைத் தடுப்புக்காவலில் வைப்பதற்கான நடைமுறைகள் மற்றும் கையேடுகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. மேலும், அஸ்ஸாமில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினர், அவர்களது குடும்பத்தினரைச் சந்திப்பது தொடர்பாக அந்த மாநிலத்துக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அஸ்ஸாம் மாநில அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய அரசின் சுற்றறிக்கைகளைக் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநிலத்தில் தடுப்புக்காவல் மையங்களை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதிக்குள் அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 47 வெளிநாட்டினர், 15 நாள்களுக்குள் அவர்களுடைய குடும்பத்தினரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் சுற்றறிக்கைகளை மாநில அரசு விரைந்து கடைப்பிடிக்க வேண்டும். சரியான காரணங்கள் இல்லாமல், நீண்ட நாள்களாக வெளிநாட்டினர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது பொருத்தமற்றது என்று கூறி, வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.