போபால்: மத்திய பிரதேசத்தில் ராஜ்பூர் சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேவி சிங் படேல் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
மொத்தம் 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்துக்கு நவம்பர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 11 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதையொட்டி அந்த மாநில அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இதையொட்டி அங்த மாநில அரசியல் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
15 ஆண்டுகளாக மாநிலத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் பாஜக, மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் காங்கிரஸார், ஆட்சியைக் கைப்பற்ற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அங்கு முகாமிட்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆளும் பாஜக அரசின் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான யஷோதரா ராஜே சிந்தியா, தேவி சிங் படேல் பெயர்கள் கொண்ட 177 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டது. இதையடுத்து பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் நேற்று மாலை 16 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி பட்டியல் வெளியிட்டது. இளம் வாக்காளர்களைக் கவரும் நோக்கில், இம்முறை புதுமுகங்கள் பலருக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தலைமை வாய்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசம் ராஜ்பூர் தொகுதிக்கான பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த தேவி சிங் படேல் இன்று அதிகாலை ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.
ராஜ்பூர் தொகுதியில் 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்று பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தேவி சிங். அவரது மறைவு பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி 16 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதில், தற்போதைய எம்எல்ஏக்கள் 5 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆடை தொழிற்சாலையில் மோதல்: சக ஊழியரை கொலை செய்த நபா் கைது

நெல்லை அருகே பெண் வெட்டிக் கொலை

காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்றுவந்த இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு

லாட்டரி விற்பனை: 3 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



