
ஷாஜகான்பூர்: ஓடும் ரயிலில் சிகரெட் புகைக்கும் நபரைத் தட்டிக் கேட்ட கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழந்துள்ளது.
பீகாரில் நவமபர் மாதத்தில் நடைபெறும் 'சத் பூஜை' மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக பஞ்சாபில் இருந்து பீகார் செல்லும் ஜாலியன்வாலா எக்ஸ்பிரஸில் சன்னத் தேவி (35) என்பவர் தனது குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டு இருந்துள்ளார். இவர் கர்ப்பிணியாவார்
அவருடன் ஒரே பெட்டியில் பயணம் செய்த சோனு யாதவ் என்பவர் சிகரெட் புகைத்து உள்ளார். இதனை கர்ப்பிணியான சன்னத் தேவி கண்டித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்நது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்து. வாக்குவாதம் உச்சத்தை அடையவே, அந்தப் பெண்ணை சோனு தாக்கி அடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்த ஸ்டேஷனான ஷாஜகான்பூரில் ரயில் நிறுத்தப்பட்டது.
உடனடியாக அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி சோனுவை கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.